கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் மேலும் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தபடுகிறதா -?
திறந்தவெளிப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்று ஒருபக்கம் வாட்டி வதைக்கிறது என்றால், நாள்தோறும் டன் கணக்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் புதிய அச்சத்தை உண்டு பண்ணியுள்ளன.
மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசம், கையுறை, பிபி கிட் ,நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஊசி, குளுக்கோஸ் போன்றவறை அப்புறப்படுத்தபட்டு எரிக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறியே ?
நாளொன்றுக்கு 30 டன் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு மட்டுமே தமிழகத்தில் வசதிகள் உள்ள நிலையில், தற்போதோ 300 டன் மருத்துவ கழிவுகள் சேகரமாகிறதாம். அவற்றை அப்புறப்படுத்த போதிய வசதிகள் தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை.
மருத்துவ குப்பைகள் பெரும்பாலும் மண்ணில் புதைக்கப்பட்டும், நீர்நிலைகளில் கொட்டபடுவதாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது..
சாதாரண குப்பைகளோடு மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதால் அதனை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து வேலைவாங்கும் அரசு அவர்களின் நலனை சிறிதும் நினைவில் கொள்ளாதது வேதனையே.
தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post