சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் உத்தரவுப்படி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுவது என்பது குறித்த உபகரணங்களின் மாதிரி அடங்கிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் மகளிர், மகப்பேறு துறை சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை தலைவர் வசந்தமணி, தென்னிந்திய அளவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
Discussion about this post