பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது. முதலில், சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் 7 புள்ளி 5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில், அதற்கான கலந்தாய்வு காலை 8 மணிக்கு தொடங்கியது.
பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் முறையாக இந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.
பிப்ரவரி 7 முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் பிப்ரவரி 15ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
பிப்ரவரி 22ம் தேதி முதல் மாணவர்கள் அசல் சான்றிதழை சமர்ப்பித்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post