திருவாரூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் 6 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது. திருவாரூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மனநல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கொண்ட குழுவினர், குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.
இந்த திட்டத்தில் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட குழந்தைகளில் மாற்றுத்திறன் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களில் 8 மாணவர்களுக்கு 43 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான உதவி உபகரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வழங்கினார்.
இந்த முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் 16ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post