களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமான ஓவியா ஆரம்பத்தில் சாதாரண நடிகையாக வலம் வந்தார்.அதன்பின் அவருக்கு அதிகமாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக bigboss 1 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை அளவற்றது என்று கூறலாம்.
இன்றும் சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி என்ற பக்கம் active- ஆக உள்ளது அவருக்கு கிடைத்த வெற்றிதான். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் 90ml ,காஞ்சனா ஆகிய திரைப்படங்களில் நடித்து பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓவியாவிடம் ரஜினிகாந்த் ,கமல் அரசியலில் ஒன்றாக இணைவது குறித்து உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.அந்த கேள்வியை நிராகரித்த ஓவியா தற்போது அந்த கேள்விக்கான பதிலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் ‘அரசியலற்ற நடிகர்களிடம் அரசியலைப்பற்றி மீடியா கேள்வி கேட்கக் கூடாது. இந்த மாதிரி கேள்விகளை பொதுமக்களிடம் கேட்பதில் எதிர்பாராத பதில்கள் கிடைக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
Media should be conscious of not asking political questions to Apolitical actors.
Seeking answers to the public on such topics would get you a different reality I think.#IamApolitical #Peace ?— Oviyaa (@OviyaaSweetz) November 26, 2019