சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ஏற்படும் மின் அழுத்த பிரச்னையை குறைக்க, மாற்று வழியில் மின் விநியோகம் செய்ய திட்டமிட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தின் போது, திருத்தணி தொகுதி உறுப்பினர் நரசிம்மன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, பூனி மாங்காடு கிராமத்தில் மின் அழுத்தத்தை போக்க மின் மாற்றி அமைக்கப்படும் என்றார். இதற்கு இடம் தேர்வு செய்தால் துணை மின் நிலையம் அமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்றார். சோழிங்கநல்லூர் தொகுதி உறுப்பினர் அரவிந்த் ரமேஷின் கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் நிறுவனங்கள், துணை மின் நிலையம் அமைக்க இடம் கொடுக்க மறுப்பதாக தெரிவித்தார். மடிப்பாக்கம் பகுதியில் ஏற்படும் மின் அழுத்தத்தை குறைக்க மாற்று வழியில் மின் விநியோகம் செய்ய திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
Discussion about this post