21 வயதுக் கொண்ட கிருஷ்ணகிரி எம்.பி.ஏ. மாணவி ஒருவர், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாட்டத்தில் மட்டும் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 219 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 326 கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள், 2,221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட மாணவி ஜெய் சந்தியா ராணி, தேர்தலில் 1,160 வாக்குகளை பெற்றார். இவர், கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், வெற்றிக் குறித்து மாணவி சந்தியா ராணி கூறுகையில், “நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் உண்மையாகக் கடமையைச் செய்வேன். மேலும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன் என்று தெரிவித்தார்.
ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்சந்தியா ராணியின் தந்தை ஜெயசாரதி, ஏற்கனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post