வரலாற்று சாதனையாக நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் போர்க்கால அடிப்படையில் ஆறுகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அதம்பார் திருமலை ராஜன் ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் 82 சதவிதம் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் தேவையை அறிந்து நிறைவேற்றி வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
Discussion about this post