உலக கோப்பை 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது நாளான இன்று 5வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டுப்பிளசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசம் அணியும் மோதுகின்றன. தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தில் தென் ஆப்ரிக்கா அணி உள்ளது.
வங்கதேச அணியைப் பொறுத்தவரை உலக கோப்பை போட்டியில் முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தேல்வியை சந்தித்த வங்கதேச அணி, வெற்றியுடன் கணக்கை தொடங்க ஆவலுடன் உள்ளது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அதிரடி ஆட்டக்காரர் தமிம் இக்பால் இந்த ஆட்டத்தில் ஆடுவதில் சந்தேகம் உள்ளது. இது வங்கதேச அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுவரை இரண்டு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. தென் ஆப்ரிக்கா அணி 3 வெற்றியும், வங்கதேச அணி 1 வெற்றியையும் பெற்றுள்ளது.