நம்ம ஊர் குக் வித் கோமாளியைப்போல ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) இதன் 13வது சீசனில் கோப்பையை வென்றுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயன்.
27வயதேயான ஜஸ்டின் நாராயன் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் பங்கேற்றவர், தனது 3 சக போட்டியாளர்களை தோற்கடித்து கோப்பையை தன் வசமாக்கியுள்ளார். ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கோப்பையை கைப்பற்றியுள்ள இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு சசி செழியா என்பவர் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜஸ்டின் நாராயன், “உங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களை கண்டுபிடியுங்கள்; கடின உழைப்பை செலுத்துங்கள்: உங்களை நீங்களே ஆச்சரியப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்! ஐ லவ் யூ” என பதிவிட்டுள்ளார்
Discussion about this post