காங்கிரசின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு பிறகே மசூத் அசார் விடுவிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு விடுதலை செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங், மசூத் அசார் உட்பட மூன்று பேரை விடுவிப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சோனியா காந்தியே முதலில் ஒப்புதல் அளித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் நேருவும், இந்திரா காந்தியும் மிகப் பெரிய தவறை செய்துள்ளனர் என்றும் அதனால் தான் காஷ்மீர் பிரச்சனை இன்றளவும் நீடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
Discussion about this post