சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸினால் தமிழகத்தில் பின்னலாடை நிறுவனங்களில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகத்தில் அணியும் மாஸ்க் பயன்படுத்தி வருவதால், அங்கு மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாஸ்க் கேட்டு அண்டை நாடுகளின் உதவிகளை சீனா நாடி வருகிறது. இதன் தாக்கம் திருப்பூரிலும் எதிரொலித்து உள்ளது. திருப்பூர் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும் போது மாஸ்க் அணிவது வழக்கம். வாரம் 30 முதல் 40 லட்சம் வரையிலான மாஸ்க்கை பின்னலாடை நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.
அதோடு, 50 பைசா முதல் 1 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த மாஸ்கானது, தற்போது 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மலிவு விலையில் மாஸ்க் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னலாடை நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post