பிரபல ஏர்வேஸ் நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் உடன் மூன்று பார்பி பொம்மைகள் இணைந்துள்ளதாக மேட்டலின் பார்பி நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்துறையில் இளம் சிறுமிகளை ஊக்குவிக்க இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பார்பியின் புதிய பொம்மைகள் தயாரிக்கும் “Dream Gap” திட்டத்தின் கீழ் இத்தகைய புதிய பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் 5 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் சுய நம்பிக்கை மற்றும் திறமையை பரிசோதிப்பதாகும். விளையாட்டுத்துறையின் பெண்களை ஊக்குவிப்பதில் உலகளவில் பல நிறுவனங்கள் முன்மாதிரியாக உள்ளன. இதில் பார்பி பொம்மைகளை அறிமுகப்படுத்தி விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனமும் இணைந்துள்ளது.
ஏனென்றால் இங்கிலாந்தின் பொறியியல் பணியாளர்களில் வெறும் 12% மட்டுமே பெண்கள் உள்ளனர் என்றும், இங்கிலாந்து விமானிகளில் வெறும் 4.3% பெண்கள் மட்டுமே உள்ளனர் என இங்கிலாந்தில் உள்ள மகளிர் பொறியியல் அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தின் பார்பி பொம்மைகளில் ஒரு பைலட், ஒரு பொறியாளர், மற்றும் கேபின் குழு உறுப்பினர் ஆகியவை உள்ளன. மனித உடலின் பன்முகத்தன்மையைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பொம்மைகள் உண்மையான விர்ஜின் அட்லாண்டிக் பணியாளர்களை போல பிளாட் ஷூக்களை அணிந்து காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து விர்ஜின் அட்லாண்டிக்கின் நிக்கி ஹம்ப்ரி கூறும் போது, “விமானப் போக்குவரத்து உட்பட பல பணிகளில் பெண்கள்பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இதனை ஒரே இரவில் மாற்ற முடியாது என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். பெண்களுக்காக எந்தவொரு வேலையும் காத்திருக்கும் என்பதை சிறுவயது வயது குழந்தைகளை முன்னிலைப்படுத்தி, நாங்கள் வெளிப்படுத்த உள்ளோம் என்றார்.
மேலும் பார்பியுடனான இந்த பயணம் நிச்சயம் எங்களுக்கு மைல்கல் தான் எனவும் கூறியுள்ளார். ஐந்து வயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் பாதையை தன்னால் பின்பற்ற முடியாது என பெண்கள் நம்பத் தொடங்குவது ஆச்சரியமளிக்கிறது என்றும், இத்தகைய எண்ணத்தை மாற்றுவதே எங்கள் லட்சியம். எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post