உலகம் முழுதும் இன்று நுகர்வோர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மத, இன,மொழிவாரி பேதங்களுக்கு அப்பாற்பட்டு பாமரன் முதல் பரமசிவன் வரை பாரபட்சமின்றி உயிர்களாய்ப்பிறந்த எல்லோரும் நுகர்வோர் என்ற ஒரு குடையின் கீழ் சமம்.
நுகர்வோர்களுக்கான உரிமைகள் குறித்து ஜான்.எஃப் கென்னடி 1962 ல் உலக அரங்கில் பேசத்தொடங்கினார். அமெரிக்காவின் 35வது அதிபரான இவர்தான் இது குறித்துப் பேசியவர்களில் அதுநாள் வரையிலும் முதலாமவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1962 ல் அமெரிக்க ஒன்றிய காங்கிரசில் நுகர்வோர் உரிமைகளில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதன் மீதான விழிப்புணர்வு குறித்தும் விரிவாக உரையாற்றினார் ஜான் எஃப் கென்னடி.
இந்த விழிப்புணர்வை உலகம் முழுதும் ஏற்படுத்தவும், நுகர்வோர் பாதுகாப்பையும், வாடிக்கையாளருக்கு நுகர்வின் மீதான நம்பிக்கையை உறுதிசெய்யவும் வேண்டி 1983 ம் ஆண்டு முதல் மார்ச் 15 நுகர்வோர் உரிமைகள் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1985 ல் ஐநா சபை இந்த நாளை அங்கீகரித்து.
ஏன் மார்ச் 15 ஐ தேர்வு செய்தார்கள்? வேறொன்றுமில்லை. அமெரிக்க ஒன்றிய காங்கிரஸுக்கு ஜான் எஃப் கென்னடி உரையாற்றினார் என்று சொன்னோமே, அந்த தினம்தான்
அதன்படி இன்று 36வது நுகர்வோர் உரிமைகள் தினம். இந்த நாளில் நம் உரிமைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. அவையாவன,
பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை
தெரிவு செய்து கொள்ளும் உரிமை –
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை –
கவனத்தை ஈர்க்கும் உரிமை –
அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை
இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நுகர்வோர்களாக வலம்வருவதற்கு நம் உரிமைகளைச் சரிவரப் பயன்படுத்துவோமாக.
Discussion about this post