இளைஞர்களிடம் உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில், சென்னை பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தனியார் அறக்கட்டளை மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு துவக்கி வைத்து, மாரத்தானில் பங்கேற்றார்.பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தானில் காவல் துறை அதிகாரிகளும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post