மராத்தியர்களுக்கு 16 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மராத்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகளை வழங்கியும், கட்டித் தழுவியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர் மராத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அதிக மக்கள் தொகையை கொண்ட தங்கர் இன மக்களும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரிவருகின்றனர். எனினும், அந்தக் கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ள முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அந்த கோரிக்கையை அனுப்பியுள்ளார்.
Discussion about this post