அடுத்த ராணுவ தலைமை தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ராணுவ தலைமை தளபதியாக உள்ள பிபின் ராவத், வரும் 31-ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அந்த பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது 37 ஆண்டு கால ராணுவ பணி அனுபவத்தில் ஜம்மு-காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள மனோஜ் முகுந்த் நரவனே, ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையை திறம்பட வழிநடத்தியமைக்காக ‘சேனா’ பதக்கம் பெற்றுள்ளார். இதுதவிர, தனது பணிகளுக்காக ‘விசிஷ்ட் சேவா’, ‘ஆதி விசிஷ்ட் சேவா’ ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post