இலங்கையில் மகிந்தா ராஜபக்சே ஆட்சியின் போதுதான் அதிக நபர்கள் மாயமானர்கள்: மனோ கணேசன்

இலங்கையில் தேடப்பட்டு வரும் நபர்கள் அனைவரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் மாயமானவர்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். மேலும் மாயமானவர்களின் உறவினர்களுக்கு தற்போது கொடுக்கப்படும் நிவாரணம் அவர்களது இழப்புகளை எந்த வகையிலும் ஈடு செய்யாது என்து குறிப்பிட்ட அவர், போர் குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலா நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Exit mobile version