போதிய மழை இல்லாத காரணத்தால் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.30 அடியாக குறைந்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. கடும் வெயிலினால் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் தேவைக்காக வாரம் ஒருமுறை மட்டும் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் மொத்த உயரம் 57 அடி நீர் மட்டம் உள்ள நிலையில், தற்போது 36.30 அடி நீர்மட்டமே உள்ளது. தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வதைப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.