மணிப்பூர் மாநில சுற்றுலா துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ள சங்காய் கண்காட்சி திருவிழா, பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது.
அந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் மணிப்பூரின் கலாச்சார கலைவிழா, தலைநகர் ஃஇம்பாலில் உற்சாகத்துடன் தொடங்கி களைகட்டியுள்ளது. விலங்குகளின் பாதுகாவலான திகழும் மணிப்பூர் மாநிலத்தில் இயற்கை வளத்தையும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் விதமாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மனித உருவங்கள், மான்கள், கூடாரம், பழமை மாறா கூரை வீடுகள் என ஒவ்வொன்றும் மணிப்பூர் மக்களின் கலாச்சாரத்தையும், தெய்வ வழிபாடு முறை, கடவுள் நேசிப்பு என ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கின்றன.
கண்காட்சியில், அவர்களின் ஆதி உணவுகளும் இடம்பெற்றுள்ளன. 20-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. மணிப்பூர் மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரையும் ஈர்த்துள்ளது.
Discussion about this post