தமிழறிஞர் அயோத்திதாசர் பண்டிதரின் 175வது ஆண்டு நினைவாக வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனை அதிமுக முழு மனதோடு வரவேற்பதாக அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழையும், திராவிடத்தையும் காக்க தேம்பாவணி நூலை எழுதிய வீரமாமுனிவருக்கு தூத்துக்குடியில் முழு உருவச்சிலையுடன் மணிமண்டபமும்,
சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டயபுரத்தில் ஆண்டு தோறும் அரசு எடுக்கும் அறிவிப்பை கொடுத்து தமிழுக்கு பெருமை சேர்த்தது அதிமுக அரசு என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post