சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. விளைச்சல் குறைந்தாலும் மாம்பழ பிரியர்களின் ஆர்வத்தால் விலையும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாம்பழம் என்றாலே சேலம் தான் நினைவுக்கு வரும். சேலத்து மாம்பழம் என்ற பெயர் நினைவுக்கு வருவதற்கு முக்கிய காரணம் இங்கு விளைவிக்கப்படும் மாம்பழங்கள் கூழ் தயாரிக்கவும், ஜாம் தயாரிக்கவுமே பயன்படுத்தப்படுகிறது. நேரடியாக சுவைக்கக் கூடிய மாம்பழங்களின் உற்பத்தியும், விற்பனையும் சேலத்தை மையமாக கொண்டே நடைபெறுகிறது.
இதுமட்டுமின்றி சேலத்தில் உள்ள கனிமவளம் நிறைந்த மண், மாம்பழத்தின் சுவையையும், மனத்தையும் கூட்டுகிறது. இங்கு பெங்களூரா, மல்கோவா, குண்டு, நடுச்சாலை என 60 வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடுமையான வெயில் மற்றும் போதுமான மழை இல்லாததால் விளைச்சல் குறைவாக உள்ளதால், விலை சற்று அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post