கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கள்ள தொடர்பு விவகாரத்தால் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் 28 வயதான சுஜித். இவர் திங்கள்நகர் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணோ சுஜீத்திற்கு தெரியாமல் 42 வயதான சுரேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் சுரேஷிற்கும், சுஜித்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கள்ளத்தொடர்பை கைவிடும்படி சுஜித்திடம் சுரேஷ் பலமுறை கூறி கண்டித்துள்ளார். இருப்பினும் அதையெல்லாம் கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்ததால், ஆத்திரமடைந்த சுரேஷ், சுஜித்தை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த18-ம் தேதி மாலையில் மாங்குழி பகுதியில் சுரேஷ் தனது நண்பர் ராபின் என்பவருடன் சேர்ந்து, மது அருந்திகொண்டிருந்த போது, சுஜித்தை செல்போனில் தொடர்புகொண்டு, சமரசம் பேச மாங்குழி பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதனடிப்படையில் தனது நண்பருடன் மாங்குழி பகுதிக்கு சென்ற சுஜித்தை பிடித்த சுரேஷ், உடன் வந்த நண்பரை அடித்து துரத்தியுள்ளனர். பின்னர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தை சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதில் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சுஜித் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் காவல்துறையினர் சுஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுரேஷ் மற்றும் ராபினை தேடி வருவதோடு கள்ள தொடர்பில் இருந்த பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post