திருமண ஆசை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய திமுக பெண் நிர்வாகி மீது, பாதிக்கப்பட்டவர் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் வடபழனியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் செந்தாமரை என்பவர், பாலச்சந்தர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திருமணம் ஆகாதவர் என்று கூறிய செந்தாமரை, மனைவியை இழந்த பாலச்சந்தரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பாலச்சந்தரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி செலவு செய்துள்ளார்.
செந்தாமரையின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலச்சந்தர், விசாரித்த போது செந்தாமரைக்கு 1989 ஆம் ஆண்டே திருமணமாகி, 28 வயதில் பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது.
Discussion about this post