திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வீடு வாங்கித் தருவதாக கூறி 24 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்தவர் மீது காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை சங்கர் நகரைச் திருமூர்த்தி என்பவர், வீடு வாங்குவதற்காக 5 வருடங்களுக்கு முன்பு 24 லட்ச ரூபாய் பணம் மற்றும் 21 பவுன் நகையை முருகன் என்பவரிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட முருகன் வீடு வாங்கித் தராமலும் பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்ததாக கூறப்ப்டுகிறது.
இந்நிலையில் திருமூர்த்தி இறந்து விட, அவரது மனைவி திருமாதாள் பணத்தை மீட்டுத் தரக் கோரி திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
Discussion about this post