ஆந்திர மாநிலத்தில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் பல பெண்களிடம் சினிமா பாணியில் காதல் வசனங்களை பேசி திருமணம் செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெண்கள் இருவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தியதில் இருவரும் அருண்குமாரின் மனைவிகள் என்பது தெரியவந்தது.
இதனிடையே புகாரின் அடிப்படையில் அருண்குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
Discussion about this post