வாலாஜாபாத்தில், திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கேள்வி எழுப்பிய பொதுமக்களை, திமுக நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் ஊராட்சியில், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் எழுந்து, திமுக கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதனால், ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி ஒருவர், அந்நபரை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர், நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு குறைந்த அளவே மக்கள் கூடியதால் திமுகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
Discussion about this post