ஈரோட்டில் டிக் டாக் செயலி மூலம் பெண்ணுக்கு காதல் ஆசை காட்டி பணம், நகையை பறித்த காதல் மன்னன் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த சர்மிளா கணவரை விட்டு பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வரும் இவர், அவ்வப்போது டிக் டாக் செயலியில் சில ஆண்களுடன், பாடலுக்கு ஒன்றாக நடித்து வீடியோவும் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த உமர் செரீப் என்பவர் டிக்டாக் செயலி மூலம் அறிமுக ஆகியுள்ளார். ஓட்டுநரான உமர் செரீப்புக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சர்மிளாவும், உமர் செரீப்பும் டிக் டாக் செயலி மூலம் தங்கள் காதலை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளனர். உமர் செரீப் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து நெருங்கி பழகி வந்துள்ளார். சர்மிளாவிடம், உமர் செரீப் 10 பவுன் தங்க நகைகள், 20ஆயிரம் ரொக்கபணத்தையும் தனது சொந்த தேவைக்காக வாங்கியுள்ளார். இந்த நிலையில் சர்மிளா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி செரீப்பை வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுத்து வந்த செரீப், ஒரு கட்டத்தில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதையடுத்து சர்மிளா அளித்த புகாரின் பேரில் உமர் செரீப்பை கைது செய்த காவல்துறையினர், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post