மணலியில், குடிபோதையில் மனைவியை அடித்தவரை தட்டி கேட்ட காவல் துறை உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த மணலி பல்ஜி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன், இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில குடி போதயில் இருந்த விஜயன், மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக ஐஸ்வர்யா காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தம்பதியனரை சமாதானம் செய்ய முயற்சித்த போது, விஜயன், உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post