திருவள்ளூர் மாவட்டத்தில், ஓசியில் பிரியாணி தராததால் ஆத்திரத்தில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருமழிசை மெயின் ரோட்டில் அருணாச்சல பாண்டியன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 18 ஆம் தேதி இவரது ஹோட்டலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அன்று மாலை மீண்டும் கும்பலாக வந்த அவர்கள், ஹோட்டல் மற்றும் அருகே இருந்த வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அருணாச்சல பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரை வாபஸ் பெறுமாறு எபினேசர் என்பவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்த போலீஸார், பெட்ரோல் குண்டுகளை வீசிய 7 பேரை கைது செய்தனர். ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத் எபினேசரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post