மம்தாவின் தர்ணா எதிரொலி: எதிர்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எழுப்பியதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாரதா சிட்பண்ட் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற சிபிஐ நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தாவில் முதலமைச்சர் மமதா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த போராட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது. மக்களவை இன்று துவங்கியவுடன், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version