மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சிபிஐ மூலம் மத்திய அரசு தங்களை மிரட்ட முயல்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, நேற்றிரவு முதல் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தாவின் தர்ணாவுக்கு ராகுல் காந்தி, உமர் அப்துலா, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சரத் பவார் உட்பட பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post