மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி எடுத்த ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. அனைத்து தொகுதிகளையும் வெல்லும் என்ற எதிர்பார்த்த திரிணாமுல் காங்கிரசுக்கு 23 தொகுதிகள் வெற்றி பெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மம்தா அறிவித்தார். ஆனால் அதனை கட்சியின் மூத்த தலைவர்கள் மறுத்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும் என்று கேள்வி எழுப்பினார். இதன்பின்னணியில் மிகப்பெரிய விஷயம் மறைந்துள்ளதாகவும் மம்தா தெரிவித்தார்.
Discussion about this post