தர்ணாவில் ஈடுபட்டவாறு வழக்கமான அலுவல் பணிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்டார்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க மாநில தலைமை செயலகத்திற்குள் தன்னை அனுமதிக்காததை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தற்போது மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்திலேயே தனது அலுவல் பணிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவனித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post