மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பாரதிய ஜனதா மீது அச்சம் ஏற்பட்டுள்ளதால், ரத யாத்திரைக்கு தடை விதித்துள்ளதாக அமித்ஷா விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாள் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறி மேற்கு வங்க அரசு தடை விதித்தது.
இதனை எதிர்த்து பா.ஜ.க உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித்ஷா, மேற்கு வங்கத்தில், ஜனநாயக நெறிமுறைகளை நசுக்குவதை முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கடை பிடித்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து அவருக்கு பயம் வந்து விட்டதாகவும் கூறினார்.
திட்டமிட்டே பாஜக ரத யாத்திரையை அவர் தடுத்துள்ளதாகவும், சட்டப்படி அனுமதி பெற்று யாத்திரை நடக்கும் எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
Discussion about this post