சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், குழந்தையைத் துன்புறுத்தும் பெண்ணை மலேசியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கணவரின் முதல் மனைவியின் 9 வயதுக் குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தும், கடுமையாக தாக்கி மன உளைச்சலை ஏற்படுத்தும் இளம்பெண்ணின் வீடியோ, சமூக வலைதளங்களில், அண்மையில் வைரலானது. வீடியோவில், சிறுமி ஒருவர் பயத்துடனும் பதற்றத்துடனும் அமர்ந்துள்ளார். அவரருகே கையில் சிறிய கத்தியுடன் அமர்ந்திருக்கும் பெண், கத்தியால் குத்திவிடுவேன் என மிரட்டும் தொனியில் பேசி இருந்தார். மேலும், சிறுமியை தாக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வந்த, புகார்களின் அடிப்படையில் மலேசிய காவல்துறையினர், விசாரணை நடத்தி, அந்த பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.
Discussion about this post