திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 6-ம் நாளில் 32 அடி உயர தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 6ஆம் நாளான சனிக்கிழமை, அனுமந்த வாகனத்தில் திருமாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தங்கம் லட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே ரதத்தை வடம்பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Discussion about this post