மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஐபோனின் புதுமாடலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார்.
ஐபோன் எக்ஸ் ஆரை அறிமுகம் செய்து வைத்த மத்திய அமைச்சர் உரையாற்றினார். ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் சால்கோம்ப் நிறுவனம் தமிழகத்தில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார், மேலும் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக நோக்கியாவால் மூடப்பட்டுள்ள ஆலையை பயன்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post