உத்தரப்பிரதேச மாநிலத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், பசு பாதுகாப்பு குறித்து, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் தெருக்களில், ஆதரவற்று சுற்றித்திரியும், கால்நடைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதற்கான பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜில்லா பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக 16 மாநகராட்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். கோசாலைகளை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.