காயம் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள் தவான் மற்றும் இஷாந்த் சர்மா பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி அடங்கிய தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயமடைந்த தவான் நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் காயம் காரணமாக நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post