‘மஹா’ புயல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 4 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தீவிரப் புயலாக மகா புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. முதன்முறையாக அரபிக்கடலில் ஒரே நேரத்தில் ‘கியார்’, ‘மகா’ ஆகிய இரண்டு புயல்கள் உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.