மேற்கு வங்கத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்கை நதியில் குதித்து ‘மேஜிக்’ செய்ய முயன்றவர் ஆற்றில் மூழ்கி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேஜிக் நிபுணர் சான்சல் லஹிரி. இவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கங்கை நதிக்குள் குதித்து மீண்டு வரும் மேஜிக் காட்சியை நிகழ்த்த திட்டமிட்டார். இதற்காக ஹவுரா பாலத்தின் கீழ் உள்ள கங்கை நதியில், நேற்று முன் தினம் மேஜிக்கை நிகழ்த்த போலீஸ் அனுமதி பெற்றார். லஹிரியின் மேஜிக்கை காண பல பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் ஒரு படகில் ஏறிய அவர், சங்கிலியால் கை, கால்கள் கட்டப்பட்டு, கூண்டுக்குள் வைத்து பூட்டப்பட்டார். பின்னர் கிரேன் உதவியுடன் அந்தக் கொண்டு ஆற்றில் இறக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும், லஹிரி மேலே வராததால் அங்கு கூடியிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து, பேரிடர் மீட்புப்படை வீரர்கள், கங்கை ஆற்றில் குதித்து, அவரை தேடின். இந்தப் பணி இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு நடவடிக்கை இன்றி, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post