தென்மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மதுரை – தூத்துக்குடி இடையே, இருவழி ரயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு தினமும் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையிலிருந்து கன்னியாகுமரி தூத்துக்குடி மார்க்கத்தில் ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளது.
இதனால் நேர விரயம் ஆவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இருவழி ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தமிழக அரசின் நடவடிக்கையால் மதுரை – தூத்துக்குடி இரட்டை மின் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு 900 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
இதனைத் தொடர்ந்து, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளின் மேற்பார்வையில் ரயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசுக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post