மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், சூரசம்ஹாரத்திற்காக அம்மனிடமிருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 28ம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும் சுப்ரமணியசாமிக்கு காலை மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்திற்காக கோவர்த்தனாம்பிகை அம்மனிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.
Discussion about this post