மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும் , ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாவும் சிறப்புகொண்ட மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோவிந்தா, கோபாலா முழக்கம் எழுப்பிய பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம்.
Discussion about this post