மதுரையில் உள்ள தனியார் காப்பகத்தில் மாயமான 2 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில்
இருந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின், 1 வயது ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து காப்பக நிர்வாகிகள் நாடகமாடியது தெரியவந்தது.
மேலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணையில், மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரிடம், 1 வயது ஆண் குழந்தையும், கருப்பாயூரணி அருகே கல்மேடு பகுதியை சேர்ந்த சில்வர் பட்டறை தொழிலாளியிடம் 2 வயது பெண் குழந்தையும் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட காவல்துறையினர், குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களையும் கைது செய்தனர். இதனையடுத்து இதயம் அறக்கட்டளைக்கு சீல்வைத்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்
??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??
Discussion about this post