மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில், இரவு 8 மணி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 2 மணி நேரம் வாக்குப்பகுதி நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இரவு 8 மணி வரை அங்கு தேர்தல் நடைபெற்றது. தேரோட்டம் முடிந்த பின்னர் ஏராளமான மக்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று ஆர்வமுடன் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயகக் கடமையை அவர்கள் ஆற்றினர். வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிவில் 62.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post