அதிமுகவின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களாக ஆக செயல்பட்டு வரும் மாவட்ட அதிமுக அமைப்புகளை மூன்று பிரிவுகளாக பிரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, மதுரை மேற்கு, மதுரை மையம், மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மதுரை மாநகர் மாவட்டம் செயல்படும். இதேபோல் மதுரை வடக்கு, கிழக்கு, மேலூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டமும், திருமங்கலம், சோழவந்தான், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மதுரை புறநகர் மேற்கு மாவட்டமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜன் செல்லப்பா, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post