பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவாக கொடுப்பதற்கு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்றும், காலதாமதத்திற்கான காரணம் குறித்தும் விளக்கம் கேட்டு வருவாய்த்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த அழகர்சாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கடந்த 2016 டிசம்பரில் பிறப்பு இறப்பு சான்றுகளை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என மாற்றியதாகவும் அங்கு முறையாக பிறப்பு இறப்பு சான்றுகளை வழங்குவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு, பிறப்பு இறப்பு சான்றிதழ் கோரி இதுவரை கோட்டாட்சியர் அலுவலகங்களில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள், வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து விளக்கமளிக்க வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.