தமிழக ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்கள் நியமனம்: தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணவாளன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே தேர்வானது, ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உட்பட அந்தந்த மண்டல மொழி பேசும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். எனவே, ரயில்வே துறையில் தமிழகத்தில் உள்ள முக்கிய பொறுப்புகளில், தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதிக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து, தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version